
56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலக இயக்கம், மாவட்ட நுலக ஆணைக் குழு, வாசகர் வட்டம் மற்றும் தமிழ்களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியை அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டட நூலக அலுவலர் ஆண்டாள் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, தமிழ்களம் இளவரசன், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைச் செயலர் சௌந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.