
அமெரிக்காவின் சிகாகோவில் கர்ப்பிணியாக இருந்த கேரள பெண் , அவரது கணவரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் . உழவூர் குன்னம்படையில் ஆபிரகாம் (பினோய்)-லாலி தம்பதியின் மகள் மீரா (32) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார். கர்ப்பமாக இருந்த மீராவை குடும்ப பிரச்சனை காரணமாக அவரது கணவர் ஏதுமானூர் பாசியம்பிள்ளி அமல் ரெஜி சுட்டதாக அந்நாட்டில் செய்தி வெளியானது. அமல் ரெஜியை அமெரிக்காவில் போலீசார் கைது செய்தனர். மீராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வயிற்றில் ரத்தம் வெளியேறி வருவதாகவும் உழவூரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.