
ரன்பீர் கபூர் நடித்த சந்தீப் ரெட்டி வாங்காவின் அனிமல் 2023 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். படத்திலிருந்து ரன்பீரின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் பகிர்ந்ததில் இருந்தே, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகவுள்ளது. முன்னதாக, ‘அனிமல்’ செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‘ஜவான்’ ரிலீஸுக்கு ஒத்து வராமல் படம் தள்ளிப்போனது. இப்போது டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் ரெட்டி வாங்காவின் ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர் முழுநீள மாஸ் ரோலில் நடிக்கிறார். அனிமல் ஒரு கேங்ஸ்டர் டிராமா ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது.