
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் யோகிபாபு இன்று காலை வந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியில் நடிகர் யோகி பாபு மனம் உருகி முருகரை வழிபட்டார். பின்னர் அண்ணா மலையார் உண்ணாமலை அம்மனை வழிபட்டார். இதனை தொடர்ந்து பைரவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த போது நடிகர் யோகி பாபுவுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.