
சீனாவில் வரும் டிசம்பர் குளிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவின் வுகானில் 2019ம் ஆண்டின் இறுதியில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்றுநோயாக மாறியது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொரோனா லட்சக்கணக்கானவர்களின் ஆரோக்கியத்தை தற்போது வரை பாதித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் 209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீன சுவாச நோய் நிபுணர் ஜோங் நான்ஷான், “குளிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்பட கூடியவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.