
தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் அரசாங்கம் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (22). சம்பவத்தன்று குன்னியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்கள் மோதியது சம்பந்தமாக முதியவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்று ஏன் முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என சுபாஷ் சந்திரபோஸ் கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் மகன் விஷ்ணு (20), சிவசண்முகம் மகன் விக்கி (19), சீனிவாசன் மகன் அருண்குமார் (26) ஆகியோர் சுபாஷ் சந்திரபோஸை திட்டி, தாக்கினர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணு, விக்கி, அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்