
கொழும்பு: இலங்கை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இலங்கையின் தென் பகுதியில் கொழும்புவில் இருந்து சுமார் 1,326 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை எனவும், சுனாமி எச்சரிக்கை எதும் விடுக்கபடவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது. கொழும்பு நகரில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.