
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளி பரிசாக கோலி கையெழுத்திட்ட பேட் ஒன்றை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கினார். உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 9 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் 15ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், இந்திய நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். அவருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தீபாவளி பரிசாக விராட் கோலி கையெழுத்திட்ட ‘பேட்’ ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த பேட்டை கையில் வாங்கிய சுனக்கின் முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.