
தெலங்கானா: ஹைதராபாத் நம்பள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ 4 தளங்களிலும் பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணி மற்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.