
ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கவுதம் சிங்கானியா, திருமணமான 32 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனைவி நவாஸ் மோடியை விட்டுப் பிரிவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். கடந்த வாரம் கணவரின் தீபாவளி விருந்தில் மனைவி தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து, ரேமண்ட் குடும்பத்திலிருந்து இந்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. மனைவியைப் பிரிவதாக ரேமண்ட் தலைவர் அறிவித்ததை அடுத்து, பங்குச்சந்தையில் ரேமண்டின் பங்குகள்1.64 சதவீதம் வீழ்ச்சி கண்டது.