
மதுரை கருப்பாயி ஊரணி பகுதியை சேர்ந்தவர் சின்னக்கருப்பு (43). இவர் வண்டியூர் கண்மாய்க்கரைக்கு மீன் பிடிக்க சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சின்னக் கருப்பு தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் சின்னக்கருப்புவின் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.