
ஜிசிசி நாடுகளில் போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் இணைக்கும் திட்டத்தின் முதல் கட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். கடந்த புதன்கிழமை மஸ்கட்டில் நடைபெற்ற 40வது ஜிசிசி உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ஒருங்கிணைந்த ஜிசிசி போக்குவரத்து அபராத முறையின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.வரும் வளைகுடா உச்சி மாநாட்டில் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு முடிவுகள் அமலுக்கு வரும். வளைகுடா நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் இணைப்பதன் மூலம், வேலைக்காகவும், வருகைக்காகவும், யாத்திரைக்காகவும் அருகிலுள்ள நாடுகளுக்குச் செல்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.