
கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் கமலநாதன் (50). இவரது மகன்கள் ராபட்சாலமன் (28), யோவான் (26). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. பெருமாள்மலைக்கு வேனில் வந்து இவர்கள் 3 பேரும் நேற்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை யோவான் ஓட்டிச் சென்றார். பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடுமாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கமலநாதன் மற்றும் ராபட்சாலமன் ஆகியோர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். காயம் அடைந்த யோவான் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.