
கோவை பேரூர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ஆதர்ஸ் வித்யாதரன் (12). 6-ம் வகுப்பு மாணவர். தீபாவளி பண்டிகையை யொட்டி இவர் தனது வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு பட்டாசை பற்ற வைத்தார். அது வெடி க்கவில்லை. இதனையடுத்து ஆதர்ஸ் வித்யாதரன் அருகே சென்று பார்த்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசு வெடித்தது. இதில் சிறுவனின் வலது கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவை துண்டானது. இதில் படுகாயம் அடைந்து சிறுவனை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.