
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிவார்கள். இந்த ஆண்டு நாகப்பட்டினத்தில் நிலவும் தொடர் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி, வேளாங்கண்ணி கடற்கரை, முடி காணிக்கை செலுத்தும் இடம்,கடைவீதி மெழுகுவர்த்தி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் குறைவான கூட்டமே காணப்படுகிறது.