
தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுக்க நேற்று தீபாவளி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் கலாச்சாரம் காரணமாக இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடும் வழக்கம் உள்ளது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தலைநகர் டெல்லி என்சிஆர் பகுதியில் ஏராளமான பட்டாசுகள் வெடித்தன. தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை, பல பகுதிகளில் காலை முதலே பட்டாசு வெடித்தது, மாலை நெருங்க நெருங்க பெரிய அளவில் பட்டாசு வெடித்தது. இதன் காரணமாக, மாசுவும் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனிடையே, தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.