
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து தீ விபத்து சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக 254 இடங்களில் இருந்து அழைப்பு வந்தததாகவும், 110 இடங்களில் மற்ற வகை தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.