
செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர் வீட்டு வாசலில் இருந்தபோது 5 பேர் திடீரென தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்தவர் விஜய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பட்டாசு வெடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் விஜய்க்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.