
கம்பு, கேழ்வரகு, சாமை, தினை… இப்படி வரிசைக்கட்டி நிற்கும் எல்லா சிறுதானியங்களிலும் பிரத்தியேக மருத்துவகுணம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து உடலில் தங்கியிருக்கும் கெட்டக்கொழுப்புகளை அகற்றும் பணிகளை இவை செய்கின்றன. உடல் ஆரோக்கியம், உடல் எடை பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன. ஒருசில சிறுதானியங்கள், உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. சிறுதானிய உணவுகள், சுவையில் சிறப்பானதாக இருக்கும். தினை, கருப்பு கவுனி போன்றவை எல்லாம், சுவைகளில் சிறந்தவை. அதன் சுவையை, வேறு உணவுகளில் உணர முடியாது. அதேசமயம், குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா, வரகு போன்ற சிறுதானியங்கள் எல்லாம், மருத்துவ குணம் கொண்டவை. இவற்றிலும், சுவையும் உண்டு. ஆரோக்கியமும் உண்டு.