
காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையின் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் உயிரிழந்து விட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள அல் ஷிஃபா, அல்குட்ஸ் உள்ளிட்ட 4 பெரிய மருத்துவமனைகள் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அல் ஷிஃபா மருத்துவமனையில் 15 ஆயிரம் பேர் உள்ளனர்.
மருத்துவமனையில் குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் எரிபொருள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்து விட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகள் மின்சாரம் தட்டுப்பாடு காரணமாக வெளியே வைக்கப்பட்டுள்ளனர். தற்போது காசாவில் சுகாதார கட்டமைப்பே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.