
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கங்கொலி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 7 படகுகள், 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீபாவளி பூஜையின் போது ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரையில் படகுகளை நிறுத்தி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஒரு படகில் பிடித்த தீயானது மளமளவென பரவி உள்ளது.