
தேவையான பொருட்கள்:
சர்க்கரை – 2 கப்
சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம்
பால்- 100 கிராம்
அனைத்து உபயோக மாவு – ½ கப்
பால் பவுடர் – ¾ கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
பாதாம் – 8
முந்திரி – 10
பிஸ்தா – 5 முதல் 7 வரை
திராட்சை – ¼ கப்
பூசணி விதைகள் – 1 டீஸ்பூன்
குங்குமப்பூ – சில இழைகள்
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
நெய்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனை கிளறி கொண்டு குறைந்த தீயில் கொதிக்க விடவும். பின்னர் சர்க்கரை பாகு பிசுபிசுப்பு தன்மைக்கு மாறியதும், தீயை அணைத்துவிட வேண்டும் \பிறகு சர்க்கரை பாகில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்துவிட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை இல்லாத கோவா, மைதா மாவு, பால்பவுடர் போட்டு நன்றாக பிசைய வேண்டும். அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, பால் சேர்த்து மென்மையாக பிசைய வேண்டும். அதனை அரைமணி நேரம் மூடி வைக்க வேண்டும். இதற்கிடையில், பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தாவை மெல்லிய துண்டுகளாக கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும். இதனுடன் திராட்சை மற்றும் பூசணி விதைகளை சேர்த்து, ஒன்றாக கலக்க வேண்டும். இதனை பேடாவுக்குள் வைப்பதற்கு ஏற்றார்போல் பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, பிசைந்துவைத்துள்ள மாவில் இருந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளை உருட்டி எடுத்து அதை கப் வடிவில் அழுத்தி உள்ளே நட்ஸ் கலவையினை ஒரு ஸ்பூன் எடுத்து ஸ்டஃபிங்கை வைக்க வேண்டும். இதனை மீண்டும் வட்ட வடிவில் கவனமாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உருண்டைகள் எண்ணெய்யில் பொரிக்கும் போது உடைந்து வெளியே வராதபடி நன்றாக தயார் செய்ய வேண்டும்
பின்னர் வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி தாயாராக வைத்துள்ள உருண்டைகளை மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக வரும் அளவுக்கு பொரித்து எடுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து சூடான சர்க்கரை பாகில் மூழ்க வைக்கவும். சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை நன்றாக ஊற விட வேண்டும், பீடாக்கள் அனைத்து சர்க்கரை பாகையும் உறிஞ்சிவிடும். அதன்பிறகு பேடாக்களை வெளியே எடுத்து அதில் துருவிய முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்புகளால் அலங்கரித்து பரிமாறவும்.