
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று இமெயில் வந்துள்ளது. அந்த இமெயிலில் கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணுடன் இசக்கி என்பவர் பெயரில் இந்த இமெயில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.