
நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த அரிசி பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதம் இந்த அரிசியை தினமும் சாப்பிடுமாறு வலியுறுத்துகிறது. ஏனெனில் இந்த அரிசி பசியைத் தூண்டும், உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். ஆயுர்வேதத்தில் மூட்டுவலி, வாத நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த அரிசியை குறைவாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணித்து அதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.