
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இதுதொடர்பாக, திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியி, தீபாவளியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அநீதியின் மீது நீதியையும் வென்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழா கருணை, நேர்மறை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும். தீபாவளி பண்டிகை நம் மனசாட்சியை ஒளிரச் செய்து, மனிதகுலத்தின் நலனுக்காக உழைக்கத் தூண்டுகிறது. ஒரு தீபம் பலவற்றை ஒளிரச் செய்யும். அதேபோல ஏழை, எளியோரின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரலாம். தீபத் திருவிழாவை நாம் அனைவரும் பாதுகாப்பாக கொண்டாடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.