
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் மனிதர்களை நோய் தாக்காமல் இருப்ப தற்கு நாம் எவ்வாறு சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினர். மேலும் கீரை காய்கறிகள் போன்ற சத்தானவற்றை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரி வித்தனர்.