
அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘சித்தா’. நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘சித்தா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 17-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.