
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ‘சைரன்’. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், சைரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வெளியான சைரன் படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது.
“The Verdict”
Double the Blast💥
Presenting #Siren Teaser and wishing Happy Diwali 🪔 https://t.co/o4qpjYDi28In theaters this December 2023 !!
A @gvprakash Musical #SirenTeaser @antonybhagyaraj @KeerthyOfficial @anupamahere @sujataa_HMM @gvprakash @iYogiBabu… pic.twitter.com/6uarTTe0Bs— Jayam Ravi (@actor_jayamravi) November 11, 2023