
இலந்தை பழத்தில் வைட்டமின் -சி சத்து நிறைந்து இருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீமால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்டிடன்ட்டாக செயல்படும். இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும். முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும். இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.