
தேவையான பொருட்கள்:
எள்ளு- 3 ஸ்பூன்
வேர்க்கடலை- ஒருகப்
கடலை எண்ணெய்- தேவையான அளவு
சின்னவெங்காயம்- 10
பச்சைமிளகாய்-10
புளி- தேவையான அளவு
பூண்டு- 4
தக்காளி- 1
தேங்காய்- ஒரு கப்
செய்முறை
ஒரு கடாயில் எள்ளை போட்டு வெடித்ததும் அதில் ஒரு கரண்டி கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, புளி, வேர்க்கடலை, தக்காளி இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். இதனை மிக்சி ஜாருக்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் ஆந்திரா ஸ்டைல் புளி சட்னி தயார்.இதனை கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து பரிமாறவும்.