
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இன்று அதிகாலை அரசு சொகுசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் மோதி விபத்து ஏற்பட்டது. பெங்களூருவில் இருந்து வந்த அரசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ்மீது வேகமாக மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.