அசாமில் போலி தங்கம் கடத்திய வழக்கில் 5 பேர் கைது

அசாமில் போலி தங்கம் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏசு கிறிஸ்துவின் போலி தங்க சிலை மற்றும் போலி தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அசாமின் நாகோன் மற்றும் சோனித்பூர் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

நாகையில் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.7 கிலோ எடையுள்ள போலி தங்க ஏசு சிலை பறிமுதல் செய்யப்பட்டது. சோனித்பூரில் நடந்த சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி தங்க பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *