
லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாள் ரூ.140 கோடிக்கு விலை போனது
லண்டனில் நடந்த ஏலத்தில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் வாள் ரூ.140 கோடிக்கு ஏலம் போனது. இலக்கு விலையை விட ஏழு மடங்கு அதிகமாக விற்பனை நடந்ததாக ஏலதாரர்கள் போன்ஹாம்ஸ் தெரிவித்தனர்.
திப்பு தனது ஆயுதங்களில் இந்த வாளை மிகவும் விரும்பினார். 18ஆம் நூற்றாண்டில் பல போர்களில் திப்பு வெற்றி பெற்றார். மராட்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் பலமுறை போரிட்டுள்ளார்.திப்பு சுல்தானின் அரண்மனையின் தனியறையில் கண்டெடுக்கப்பட்ட வாளின் கைவினைத்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது என்று போன்ஹாம்ஸ் முதலாளி ஆலிவர் ஒயிட் கூறினார்.