
வடகொரியா ஆயுதங்களுக்குப் பதிலாக ரஷ்யா உணவு வழங்கும்: அமெரிக்கா
உக்ரைன் போருக்கு மத்தியில் வடகொரியாவிடம் இருந்து கூடுதல் ஆயுதங்களை வாங்க ரஷ்யா தீவிரமாக முயன்று வருவதாக அமெரிக்காவிடம் புதிய தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். “ரஷ்யா வடகொரியாவிற்கு ஆயுதங்களுக்கு ஈடாக உணவுகளை வழங்குகிறது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று கிர்பி மேலும் கூறினார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் என அவர் மேலும் கூறினார்.