
சவுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கேரள இளைஞர் உயிரிழப்பு
ரியாத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.
சவுதி அரேபியாவின் தபூக் அருகே கார் மோதிய விபத்தில் திருவம்பாடி பெருமாளிப்பாடி ஓதிக்கல் ஜோசப் – பாபி தம்பதியின் மகன் ஷிபின் ஜோசப் (30) உயிரிழந்தார். மேற்கு சவுதி அரேபியாவின் தபூக்-யாம்பு சாலையில் துபா என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அவர் பயணித்த வாகனம் மீது டிரக் மோதியது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.