
6ஜி தொழில்நுட்பத்திற்கான 127 காப்புரிமைகள் பெற்றுள்ளது இந்தியா… அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
6ஜி தொழில்நுட்பத்திற்கான 127 க்கும் மேற்பட்ட உலகளாவிய காப்புரிமைகளை இந்தியா பெற்றுள்ளது என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடு 6ஜி தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கவும், 5ஜி தொழில்நுட்பத்தில் உலகத்துடன் தோளோடு தோள் நிற்கவும் இலக்கு வைத்துள்ளது. மேலும், இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி மற்றும் 5ஜி ஸ்டேக்கில் மற்ற நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வைஷ்ணவ் குறிப்பிட்டார்.