
வளையக்கரணை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் ஏரி சீரமைக்கும் பணிக்கான தொடக்கவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் உள்ள எக்ஸ்னோரா மற்றும் ரெனால்ட் நிசான் தொழிற்சாலை சார்பில் உலக தண்ணீர் தினமான நேற்று தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்பின், நீர்வள சேமிப்பு திட்டமாக நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ரொனால்டு நிசான், நிர்வாக இயக்குனர் கீர்த்தி பிரகாஷ், எக்ஸ்னோரா தலைவர் செந்தூர்பாரி ஆகியோர் கலந்து கொண்டு வளையக்கரணை புதிய ஏரி படுகையில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் ரெனால்ட் நிசான் உயர் அதிகாரிகள் அமிர்தலிங்கம், யுவராணி வாழைக்காரணி ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ராஜன் தலைமையில் நடந்தது. இதில் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.