சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்…. அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஸ்ரீகாந்த்…!!!

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசலில் நேற்று தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 21-16, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றிக்காக ஸ்ரீகாந்த் 70 நிமிடங்கள் போராட வேண்டியிருந்தது. இந்திய இளம் வீரர் லக்சயா சென் 18-21, 11-21 என்ற நேர் செட்களில் லிக் செக் லியிடம் (ஹாங்காங்) அதிர்ச்சி தோல்வியடைந்தார். தகுதிச் சுற்றில் இந்தியாவின் மிதுன் மஞ்சு நாத் 21-8, 21-17 என்ற நேர் செட்களில் ஜோரன் வெய்கலை (நெதர்லாந்து) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் த்ரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 14-21, 14-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு-சிடி பாடியா சில்வா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *