
பொன்னியின் செல்வன் 2 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படத்தின் இரண்டாம் பாகமான பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலை நாளை வெளியிடவுள்ளனர். தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. முதல் படத்தைப் போலவே பொன்னியின் செல்வன் 2 படமும் ஐமேக்ஸ் வடிவில் வெளியாகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, அஷ்வின் காக்குமானு, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், ஆர் பார்த்திபன் மற்றும் பலர் காவிய காலப் படத்தில் உள்ளனர். பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது .