
பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு பதவி ஏற்பு
பெருந்துறை ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த கவுதம் கோயல், பதவி உயர்வு காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, மயிலாடுதுறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த எம்.ஜெயபாலன், பெருந்துறை ஊரக துணைக் கண்காணிப்பாளராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு பெருந்துறை கிராமிய கோட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பெருந்துறை ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயபாலன் ஏற்கெனவே சத்தியமங்கலம் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர்.