டீக்கடையில் ரூ.18 ஆயிரம் திருட்டு

சிதம்பரத்தை அடுத்த வயலூர் போக்குவரத்து நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 63). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சட்டப்பாடி தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு டீ குடிக்க வந்தவர் நாகராஜனை திசை திருப்பி ரூ. 18 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டார். அந்த நபர் சென்ற பிறகுதான் நாகராஜனுக்கு பணம் திருடு போனது தெரிய வந்தது. அவர் சிதம்பரம் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன்பின், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *