செல்போனில் பேசியபடி சாலையை கடந்து செல்ல முயன்ற இளம்பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி

சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையை சேர்ந்தவர் சையத் நிசார். இவரது மகள் ரைஷா தில்தார் (வயது 34). அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 4 மாதங்களாக கொளத்தூரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி அங்குள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு மாதவரம்-பாடி 200 அடி சாலையை கடக்க முயன்றார். செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ரைஷா தில்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கௌசல்யா விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *