
கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தை சேர்ந்த காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கோபி அருகே அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 38). இவர் வேடக்காரன்கோவிலில் உள்ள தனியார் மில்லில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி விவாகரத்து பெற்று தாய் ஈஸ்வரியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஜோதிமணி வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வழியிலேயே ஜோதிமணி உயிரிழந்தார்.