
கார் மோதிய விபத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண் உயிரிழப்பு
தெற்கு மும்பையின் வோர்லி பகுதியில் இன்று காலை ராஜ்லஷ்மி என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அந்த பெண் மீது வேகமாக மோதியது. தூக்கி வீசப்பட்ட பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வொர்லி போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.