
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி
தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சின்னசாமி, மகளிர் திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.