
அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்து பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ரமணசரஸ்வதி பங்கேற்று, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மிஷன் வச்சலயா மூலம் வழிகாட்டுதலின்படி, தாய், தந்தை, சிறை கைதிகளின் குழந்தைகள், மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பராமரிப்பிற்காக நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 41 குழந்தைகளுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான நிதி ஆதரவு உதவித்தொகையான மொத்தம் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்துக்கான செயல்முறை ஆணையை வழங்கினார். இதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.