
பாவனா நடித்த புதிய படத்தின் கலக்கலான பாடல் வெளியிடப்பட்டது
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவனா மீண்டும் மலையாளத்தில் நடித்துள்ள ‘என்டிக்கக்கொரு பிரேமந்தர்னு ’ . இந்த படம் கடந்த 24ஆம் தேதி திரைக்கு வந்தது. இப் படம் நல்ல வரவேற்பை பெற்று முன்னேறி வருகிறது. தற்போது இப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாவனாவுக்கு ஜோடியாக ஷராபுதீன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அடில் மைனூநாத் அஷ்ரப் இயக்குகிறார். லண்டன் டாக்கீஸுடன் இணைந்து போன்ஹாமி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ரெனிஷ் அப்துல் காதர் மற்றும் ராஜேஷ் கிருஷ்ணா ஆகியோர் இதனை தயாரித்துள்ளனர்.