
பிரதமர் வெளிநாடு செல்வதற்காக இதுவரை 22 கோடி ரூபாய் செலவு : மத்திய அரசு தகவல்
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.2019ஆம் ஆண்டு முதல் இதுவரை 21 முறை வெளிநாட்டு பயணங்களை பிரதமர் மேற்கொண்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
ஜனாதிபதி எட்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். 6.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சரின் 86 பயணங்களுக்கும் 20.87 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.2019 முதல், பிரதமர் ஜப்பானுக்கு மூன்று முறையும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்களுக்கு இரண்டு முறையும் சென்றுள்ளார்.
குடியரசுத் தலைவரின் எட்டுப் பயணங்களில் ஏழு முறை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார். தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒரே வெளிநாட்டு பயணம் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்றது.