
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் திங்கள்கிழமை
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதற்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி வழங்கினார். இரண்டு முறை ஆம் ஆத்மி கட்சியினருக்கும், பாஜக உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், 3வது முறையாக தேர்தல் நடத்தப்பட்டது.
டிசம்பரில் நடந்த தேர்தலில் 250 இடங்களில் 134 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது.டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி 15 ஆண்டுகால பா.ஜ.க.வின் ஆட்சியை நிறைவு செய்தது.