50 மாணவிகளை கண்டு மயங்கி விழுந்த மாணவன்!

பீகாரில் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர் தன்னைச் சுற்றி மாணவிகள் இருப்பதைக் கண்டு பீதியில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகரீக வளர்ச்சியால் ஆண், பெண் பாகுபாடு குறைந்து வருவதால், ஆண்களும் பெண்களும் நண்பர்களாக வெளியில் செல்வதும், பழகுவதும் சாதாரண விஷயமாகிவிட்டது. தங்களுக்கு ஆண் பெஸ்டி இருக்கிறதா அல்லது பெண் பெஸ்டி இருக்கிறதா என்று பலர் பேசுகிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட உலகத்திலும் பெண்களைக் கண்டாலே பயந்து பேசத் தயங்கும் கூச்ச சுபாவமுள்ள இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள். சிலருக்கு பெண்களைக் கண்டு மிகவும் பயம். அப்படி ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகாரில் உள்ள தனியார் பள்ளியில் மணி சங்கர் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளி இடைநிலைத் தேர்வு எழுதச் சென்றார். தேர்வு அறையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தேர்வு மையம் முழுவதும் சுமார் 50 மாணவிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் ஒரு மாணவர் கூட அங்கு இல்லை. அனைத்து மாணவிகளிடையே தனியாக அமர்ந்து தேர்வு எழுதத் தொடங்கிய மணிசங்கர் பதற்றமடையத் தொடங்கினார். வியர்த்து கொட்டிய நிலையில் மணிசங்கர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கும் கடும் காய்ச்சல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவிகள் மத்தியில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *